தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சிவகங்கை மாவட்ட கிளையின் மாவட்ட கட்டிடம் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் 28.9.2014 அன்று காலை 10 மணிக்கு திறப்பு விழா காண இருக்கிறது. இரண்டு தளங்களை கொண்ட அக்கட்டிடத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அலுவலகமும் அங்கு செயல்பட உள்ளது. உழைக்கும் வர்கங்கள் ஒன்று கூட உள்ள நிகழ்வானது சிவகங்கை அரன்மணைவாசலில் பேரணியாக தொடங்கி மாவட்ட கட்டிடம் முன்பு நிறைவடைகிறது. அதன்பின் மாநிலப் பொறுப்பாளர்களால் கட்டிடம் திறக்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் இருந்து ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் விடுக்கிறது. மாவட்ட கட்டிடம் திறந்த பின்னால் நமது மாவட்ட கிளையின் முகவரி புதிய அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. மாவட்ட கூட்டங்களும் இனிமேல் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். விழா சிறப்பாக நடைபெற வாழத்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக