மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலவலகத்தில் ஆசிரியர்கள் தங்களின் பிரச்சனைகள் சார்பாக முறையிட அலுவலரை தேடினால் அலுவலரின் இருக்கை மட்டுமே காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும் என எதிர்பார்க்கும் அல்லது ஆசிரியர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதையே தன்னுடைய வாடிக்கையாக கொண்டுள்ள அலுவலர் முதலில் தான் ஒழுங்காக அலுவலகம் வருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் வேண்டதகாத பிளவுகளை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டும் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் அமர்ந்து ஆசிரியர் பிரச்சனைகளை களைவதில் தீவிரம் காட்டலாம். இனி மேலும் இந்நடிவடிக்கை தொடர்ந்தால் அலுவலர் தான் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய பள்ளிக்கே திருப்பி விடப்படும் சூழல் ஏற்படும். அலுவலராக இருப்பதற்கான நடத்தை விதிகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதே நம் அவா.
இது குறித்து மானாமதுரை TNPTF வட்டாரச்செயலாளர் திரு.தங்கமாரியப்பன் நம்மை தொடர்பு கொண்டு கூறியதாவது:
மானாமதுரை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காண்பது என்பது இயலாத காரியமாகிவிட்டது. ஆசிரியர்களை மறைமுகமாக தூண்டிவிட்டு எதிர் விளைவுகள் ஏற்படுத்த முயல்வதாகவும், இது குறித்து விவாதிக்க அலுவலரிடம் நேரம் கேட்டால் சந்திக்க மறுப்பதாகவும் இது மிகவும் கண்டனத்துக்கு உரியது எனவும் நம்மிடம் தெரிவித்தார். TNPTFன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதே நாம் இறுதியாக எச்சரிப்பதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக