எம்.ஏ., -எம்.எட்., முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசின் மேல்முறையீட்டு மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கமுதி கே.என்., பெண்கள் மேல்நிலை பள்ளியில், 1966 ல் உடற்கல்வி ஆசிரியையாக பாலசவுந்தரி பணியில் சேர்ந்தார். பி.ஏ.,- பி.எட்., தேர்ச்சி பெற்றதால், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பின் எம்.ஏ.,- எம்.எட்., தேர்ச்சி பெற்றார். 2005 ஜூன் 30 ல் பாலசவுந்தரி ஓய்வு பெற்றார். அவர், ''பி.எட்., முடித்ததற்கு மேற்படிப்பிற்கான இரண்டு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. எம்.எட்., படிப்பிற்கு, மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க கோரி, பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,'' என ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். தனி நீதிபதி, ''மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்,'' என அரசுக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் மேல்முறையீடு செய்தனர்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. பாலசவுந்தரி சார்பில் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள்: ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தும் வகையில், அரசு ஊக்க ஊதியம் வழங்குகிறது. தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க முடியும் என்பதையும், பாலசவுந்தரி பணியின் போதே மூன்றாவது ஊக்க ஊதியம் கோரியிருக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு விளக்கத்தை ஏற்க முடியாது. ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவுப்படி, பாலசவுந்தரிக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக