தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலச்சந்தர் அவர்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சத்துணவு பொறுப்பினை தலைமையாசிரியர்கள் ஏற்கக்கூடாது எனவும், கட்டாயப்படுத்தும் அலுவலர்களிடம் தங்களுடைய ஜனநாயக எதிர்ப்பினை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் சத்துணவு ஊழியர் சங்கம் மேற்கொள்ளும் இந்த அறப்போராட்டம் வெல்வதற்கு சுவரொட்டிகளை இயக்கம் சார்பாக அச்சிட்டு ஒட்டுவதற்கும் உத்தரவிட்டுள்ளார். எனவே சிவகங்கை மாவட்டம் முழுமைக்கும் இந்த அறிவிப்பு குறுந்தகவல்களாக அதிகாலையிலேயே அனுப்பப்பட்டுள்ளது. தகவல் கிடைக்கப் பெறாதவர்கள் இதனையே அறிவிப்பாக ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக