11/20/2015
TNPTF கோரிக்கை இன்றைய தினத்தந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி,
SVG TNPTF
11/17/2015
11/15/2015
சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் அழைப்பிதழ்
லேபிள்கள்:
SVG TNPTF
11/14/2015
11/08/2015
14.11.2015 - மாநிலச் செயற்குழு அழைப்பிதழ்
லேபிள்கள்:
TNPTF NEWS
11/05/2015
அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளி முதல் நாள் ஈடுசெய் விடுமுறை அறிவிக்க வேண்டும். TNPTF வேண்டுகோள்
லேபிள்கள்:
SVG TNPTF
பெண் ஆசிரியர்களின் நலன் கருதி அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளி முதல் நாள் ஈடுசெய் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
மாவட்ட கல்வி நிர்வாகத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்;பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
சிவகங்கை: இந்தாண்டு தீபாவளி திருநாள் நவம்பர் 10 செவ்வாய் கிழமை வருகிறது. தீபவாளி அன்று ஒரு நாள் மட்டும்; அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் வெளியூரில் வசிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீபாவளி முதல் நாள் பள்ளிக்கு சென்று அதன்பின் மாலையில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கூட்;டம் நெரிசலான நேரத்தில் பயணம் செய்வது மிகவும் சிரமம் என்பதால் தீபாவளிக்கு முதல் நாள் ஈடுசெய் விடுப்பை மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டப் பொருளாளர் குமரேசன் ஆகியோர் கூட்டாக சிவகங்கை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது
தீபாவளி திருநாள் வருகிற செவ்வாய்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அன்று ஒரு நாள்; தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பான்மை ஆசிரியர்கள் தமிழகத்தின் தென் பகுதியின் கடைக்கோடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் ஞாயிறு விடுமுறைக்காக தன் சொந்த மாவட்டங்களுக்கு சென்று பின் திங்கள் கிழமை பள்ளிக்கு திரும்ப வேண்டும். அதன் பின் தீபாவளி கொண்டாடுவதற்கு திங்கள் கிழமை மாலை தன் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பவேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும்பொழுது தீபாவளி அன்று கூட தங்கள் இல்லம் திரும்ப முடியாத நிலை ஏற்படும். பெண் ஆசிரியர்கள் பெரும்பான்மையினர் பணியாற்றும் கல்வித்துறையில் மாவட்ட கல்வி நிர்வாகம் தனக்குள்ள அதிகார வரம்பை பயன்படுத்தி பிரிதொரு நாள் பணிசெய்து சமன் செய்யும் விதமாக ஈடுசெய் விடுப்பை அறிவிக்க வேண்டும். இதனால் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களும், ஆசிரியர்களும் பயனடைவார்கள்.
தீபாவளி முதல் நாள் பயணம் பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பானதாக அமைவது கடினம். மேலும் பேருந்துகள கிடைப்பதும் எளிதல்ல. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு பணிபுரியும் பெண் ஆசிரியர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள். ஈடுசெய் விடுமுறையோ அல்லது உள்ளூர் விடுமுறையோ அறிவிப்பது என்பது வழக்கத்தில் உள்ள நிலைதான். இதனால் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்காது. இந்த விடுமுறை நாளை மற்றொரு வார விடுமுறை நாளில் பணியாற்றி சமன் செய்து கொள்ளலாம்.
எனவே பெண் ஆசிரியர்களின் நலன் கருதி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஈடுசெய் விடுப்போ அல்லது விதிமுறைக்கு உட்பட்ட உள்ளூர் விடுமுறையோ அறிவிக்க வேண்டும் என் எங்கள் மாவட்ட அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

11/04/2015
தீபாவளி முதல் நாள் 9.11.2015 அன்று ஈடுசெய் விடுமுறை அறிவிக்க TNPTF கோரிக்கை
லேபிள்கள்:
SVG TNPTF
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு வருகிற 9.11.2015 அன்று விடுமுறை கோரி மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலருக்கு கடிதம் மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் வழி அனுப்பப்பட்டது. மேலும் அலைபேசி வழியிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
11/03/2015
மாநில தலைமை தேர்தல் அலுவலருக்கு TNPTF கோரிக்கை
லேபிள்கள்:
TNPTF NEWS
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)