சென்னை,ஏப். 3: மருத்துவக் கல்வியில் தகுதித் தேர்வு முறையை கைவிட வேண்டும் என டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய மருத்துவக் கவுன்சில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் என்ற பெயரில், அவசரப்பட்டு பல்வேறு மாற்றங்களை கொண்டுவர முயல்கிறது.
"விஷன்-2015' என்று பெயரிடப்பட்டுள்ள இத் திட்டத்தை உருவாக்கிட, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தனித்தனி செயல் குழுக்களை கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் ஏற்படுத்தியது.
மார்ச் 29-ம் தேதி இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப் போவதாகவும் அறிவித்திருந்தது. இதன்மூலம் இந்திய மருத்துவக் கவுன்சில் கொண்டு வர முயலும் பல மாற்றங்கள் பாரபட்ச போக்குகளை உருவாக்கும். ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து வரும் மருத்துவர்களுக்கு எதிராகவும் அமையும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தகுதித் தேர்வு முறையை அறிமுகப்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளை முடித்தவுடன் இந்த தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான், மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து, மருத்துவ சேவையில் ஈடுபட முடியும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெறவில்லையென்றால், பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்றால் கூட மருத்துவ சேவை செய்ய முடியாது.
இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், மருத்துவப் படிப்புகளிலும்தான் மாணவர்கள் மருத்துவக் கல்வியை பயில்கின்றனர். இந்த மருத்துவ நிறுவனங்களின் தரத்தையும் மருத்துவக் கவுன்சில்தான் கண்காணிக்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வை எழுதித்தான் மருத்துவப் பட்டங்களை பெறுகின்றனர். எனவே மீண்டும் ஒரு தகுதித் தேர்வு என்பது தேவையற்றது.
இளநிலை மருத்துவப் படிப்பில் பெறும் மதிப்பெண் மற்றும் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில்தான் முதுநிலை மற்றும் இதர மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அமைய உள்ளதாகக் கூறுவதும் பல்வேறு குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும்.
ஒரே ஒரு முறை எழுதும் தகுதித் தேர்வு மட்டுமே முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக கொள்ளப்படும் என்பது மருத்துவர்களின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது.
எனவே, அவசர கோலத்தில் மருத்துவக் கல்வியில் மாற்றங்கள் செய்வதை இந்திய மருத்துவக் கவுன்சில் கைவிட வேண்டும். இது போன்ற செயல்பாடுகளுக்கு மத்திய அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசுகள், கல்வியாளர்கள், டாக்டர்கள் சங்கப் பிரதிநிகள் போன்றோரிடம் கலந்து பேச வேண்டும்.
அதன் பிறகே, மருத்துவக் கல்வியில் அவசியமான மாற்றங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் கொண்டு வர வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக