சென்னை, மே 17-
புதிய அரசுக்கு ஆதர வும், ஒத்துழைப்பும் தரு வோம் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் தி. கண்ணன், பொதுச் செய லாளர் செ. போத்திலிங்கம், மாநிலப் பொருளாளர் ச. மோசஸ் ஆகியோர் கூட் டாக வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற பேரவை தேர்தலில் அதிமுக தலை மையிலான அணி பெரும் வெற்றிபெற்று உள்ளது. அதிமுகவின் பொதுச் செய லாளர் ஜெயலலிதா முதல மைச்சர் பொறுப்பேற்றுள் ளார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி புதிய அரசை வரவேற்கிறது.
தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆதிக்கம், கடும் மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற கடும் அதி ருப்திகளினால் குறிப்பாக இலவச அறிவிப்புகள், பணப் புழக்கம் போன்றவற்றையும் தாண்டி தமிழகப் பெருமக் கள் தங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்து புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ள வாக் காளர்களுக்கு ஆசிரியர் கூட்டணி பாராட்டுதலை தெரிவிக்கிறது.
அதிமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஆசிரி யர், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நேர டிப் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும், தேர் தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் புதிய ஓய்வூதி யத்திட்டம் அமல்படுத்தக் கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர பரிசீலக்கப் படும் என்றும் உறுதி அளித் தப்படி, புதிய அரசு நிறை வேற்றித் தரும் என்ற நம் பிக்கை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் 6வது
ஊதியக் குழு அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங் கப்படவில்லை. கடந்த 22 ஆண்டுகளாக மத்திய அர சுக்கு இணையான ஊதியம் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2 வருடங்களாக போராடியும் கடந்த ஆட்சியாளர்கள் மத்திய அரசு ஊழியர் களுக்கு இணையான ஊதி யம் வழங்கவில்லை.
புதிய அரசு இப்பிரச்சனை களுக்கு தீர்வளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர் களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனினும் இப்புதிய அரசு மிகப்பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டியு ள்ளது. மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற வற்றை சமாளித்து பொது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இல வச அறிவிப்புகளைவிட எதிர்கால, நிரந்தர அடிப் படைத் தேவைகளை பூர்த்தி செய்திடும் திட்டங்களை நிறைவேற்றிட நடவ டிக்கை எடுத்திட வேண்டும். தொடக்கக் கல்வித்துறை யில் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு கல்வி தரும் பொறுப்பை ஏற்றுள்ள எங்கள் அமைப்பின் ஆசிரி யர்கள் தங்கள் கடமை களை முழுமையாக ஆற்றி இந்த புதிய அரசுக்கு ஆதர வையும், ஒத்துழைப்பையும் தருவார்கள் என உறுதியளிக் கிறோம்.
இவ்வாறு அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக