விருதுநகர், ஜூன் 2: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ச.வைரமுத்து தலைமை வகித்தார். இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆசிரியைகளுக்கு 6 மாத விடுப்பு வழங்கிய தமிழக அரசைப் பாராட்டுகிறோம். சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடத்திக் கொண்டே பொதுப்பாடத் திட்டத்தில் உள்ள குறைகளைப் போக்க வேண்டும். ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக