வத்திராயிருப்பு: பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க , பணம் வாங்கி சர்டிபிகேட்டுகளில் கையெழுத்து போட்ட வத்திராயிருப்பு தொடக்க கல்வி அலுவலர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இங்குள்ள அங்கீகாரம் இல்லாத தனியார் துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை மேல்படிப்புக்கு மற்ற பள்ளிகளில் சேர்க்க மறுத்து விட்டனர். இதனால் கல்வி அதிகாரி கையெழுத்து போட்டால் இந்த பிரச்னைக்கு கேள்வி இருக்காது. எனவே பள்ளி நடத்தி வந்த தாளாளர் அன்புச்செல்வம் கல்வி அதிகாரி நம்பியாருக்கு ஏற்கனவே லஞ்சம் கொடுத்துள்ளார்.
மேலும் 2 ஆயிரம் வேண்டும் என கேட்டதால் அன்புச்செல்வம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து ரசாயனம் தடவிய பணத்தை நம்பியாரிடம் அன்பு செல்வம் கொடுத்தார். இந்நேரத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஷியாமளாதேவி தலைமையிலான போலீசார் நம்பியாரை கையும் களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். இவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக