சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் திருத்தப்பட்ட 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் புதிய சட்டசபை அமைந்துள்ளது. இந்த சட்டசபையின் முதல் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது.
கடந்த திமுக ஆட்சியின் இறுதிக் காலத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிமுக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 4ம் தேதி காலை 10.40 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
இந்தத் தகவலை சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் அதிமுக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக