மதுரை: மாற்றுத்திறனாளி மாணவர்கள், தொழில்படிப்புகள் படிக்க தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது.
இதி குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,
இந்திய அரசின் தேசிய உடல் ஊனமுற்றோருக்கான நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் இக் கல்வி ஆண்டில் தகுதியுள்ள ஆயிரம் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியானது மாநில வழி நடத்தும் அமைப்பாக செயல்படும்.
பொறியியல், மருத்துவம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தகுதியுள்ள மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியர்கள் கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.
மருத்துவம் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதத்துக்கு ரூ 2,500 ம், புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்களுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரமும் அளிக்கப்படும்.
முதுகலை மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில் நுட்பபட்ட மேற்படிப்புக்காக மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையாக ரூ 3 ஆயிரமும், புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்களுக்காக ஆண்டுக்கு ரூ 10 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் இது குறித்து அதிக விவரங்கள அறிய தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் ஊரக திட்டப் பிரிவு 044-2530 2345 என்ற எண்ணில் தொடர்பு பயன் பெறாலம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக