ராமநாதபுரம்: தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில், மருத்துவ ஆய்வு குழு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களை மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை அளிப்பர். மருத்துவ ஆய்வு திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு, நோய் வருவதை முன்னரே அறிந்து சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக மாவட்டத்திற்கு ஒரு டாக்டர், உதவியாளர் நியமிக்கப்பட்டு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 153 அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்வர். நோய் உள்ள மாணவர்களை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வர். ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு முதலுதவி அளிக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் மூலம் மாணவர்கள் கல்வியில் அதிக நாட்டம் செலுத்தி கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக