மதுரை : மதுரை உத்தங்குடி அரசு சேவை இல்லத்தில், சமூக நலத்துறை சார்பில், பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது. குறைந்தது எட்டாவது படித்த 14 வயது நிறைவடைந்த சிறுமிகள், 35 வயதுக்குட்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்கள், விதவை மற்றும் கணவரால் கைவிடப் பட்டவர்கள் பயிற்சி பெறலாம். பயிற்சிக்கு பின், தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு வழிகாட்டப்படும். இதுதவிர மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பில் சேர விரும்பும் மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் மற்றும் பெண்களுக்கு உணவு, இருப்பிடம், பாடபுத்தகம், நோட்டு இலவசம்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், கே.கே. நகர் 3வது குறுக்குத் தெரு, மதுரை - 625 020. போன் : 0452 - 253 0258. அல்லது கண்காணிப்பாளர் (பொறுப்பு), 2/216, அய்யனார் கோவில் தெரு, உத்தங்குடி, மதுரை - 627 107. போன்: 0452 - 242 2658.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக