பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

7/14/2011

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் அவலம்- பாடப் புத்தகங்களுக்குள் காதல் கடிதம், ஆபாசப் புத்தகங்கள்!

பரமக்குடி: அரசுப் பள்ளிக்கூடங்களில் சோதனை நடத்தச் சென்ற முதன்மை கல்வி அதிகாரி, மாணவ, மாணவியரின் பாடப் புத்தகங்களுக்குள் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், பைகளில் செல்போன்கள் ஆகியவை இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எல்லாம் 10,11, 12வது வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்.

நல்லவர்களாக இருக்க கிடைக்கும் வாய்ப்புகளை விட கெட்டுப் போகத்தான் இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாம் எப்படி திடமாக இருக்கிறோம் என்பதை வைத்துத்தான் நிலை தடுமாறாமல் வாழ்க்கைப் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும்.

இன்றைய மாணவர்கள், குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் மீது பல குற்றச்சாட்டுக்கள் குவிகின்றன. இந்த வயதிலேயே காதலிக்கிறார்கள், இந்த வயதிலேயே செல்போனும் கையுமாக விடாமல் பேசுகிறார்கள் என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள். இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது சில புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக மாவட்ட முதன்மைக் கலவி அதிகாரி ராதாகிருஷ்ணன் பரமக்குடி வந்தார்.

அங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலில் சோதனையில் இறங்கினார். மேல்நிலை வகுப்புகளுக்குச் சென்று மாணவர்களின் பைகளை சோதனையிட்டார். அப்போது செல்போன்கள் பல சிக்கின. அதை விட அதிர்ச்சியாக ஆபாசப் புத்தகங்கள் எக்கச்சக்கமாக சிக்கின. பலர் தங்களது பைகளில் இருந்த இதுபோன்ற குப்பைகளை தூக்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அதைப் பார்த்த அதிகாரி அவற்றையும் கைப்பற்றினார்.

பின்னர் பைகளில் செல்போன், ஆபாசப் புத்தகம் உள்ளிட்டவற்றை வைத்திருந்தவர்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்ய தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டார். இதைக் கேட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சி கதறி அழுதனர். இதையடுத்து அவர்களை மன்னித்த அதிகாரி, மாணவர்களுக்கு புத்திமதி கூறி இனிமேல் ஒழுங்காக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அடுத்து பார்த்திபனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்றார் ராதாகிருஷ்ணன். அங்கும் சோதனை நடத்தினார். அப்போது அவருக்கு கடும் அதிர்ச்சியைத் தரும் வகையில் மாணவிகள் பலர் காதல் கடிதங்களை பைகளில் வைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இங்கும் மாணவ, மாணவியர்களுக்கு கடும் எச்சரிக்கை கலந்த அறிவுரையைக் கூறினார் ராதாகிருஷ்ணன்.

இந்த சோதனை குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலும் 10,11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள்தான் அதிக அளவிலான தவறுகளில், குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். தஙக்ளது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், எப்படிப் படிக்கிறார்கள் என்பது குறித்து கவலையும், அக்கறையும் செலுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். தொடர்ந்து அவர்களைக் கண்காணித்து வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைத் தடுக்க முடியும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக