சென்னை, ஜூலை 3: மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்டப் பணிகளுக்கு சிறப்புத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு, சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர், சாந்தோமில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 4-ம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, இந்தத் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மேலும் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக