சென்னை: பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கப்படாததால் பள்ளிகளில் மாணவர்களுக்கு பல வகைப் பாடங்களும், பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் புத்தக மூட்டை சுமக்காமல் சந்தோஷமாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.
தமிழகத்தி்ல பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் முறையாக நடக்கின்றது. இதே போன்று 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.
மற்ற வகுப்புகளுக்கு இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை என்றும், அதன் தரத்தை உயர்த்திய பிறகே அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இதனால் மாணவர்கள் புத்தக மூட்டை இன்றி மகிழ்ச்சியாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர். புத்தகங்கள் வரும் வரை பயனுள்ள வகையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலாளர் சபீதா ஆகியோர் உத்தரவுப்படி இயக்குனர் வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர். அதற்காக சி.டி. உள்ளிட்ட கல்வி தொடர்பான தளவாட பொருட்களும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கணக்கு வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல், பெருக்கல் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஆங்கில அறிவை மேம்படுத்த ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இது தவிர நீதிக்கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல், இந்தியாவின் பெருமைகளைக் கூறுதல், பொது அறிவு வகுப்பு நடத்துதல் என்று மாணவர்களுக்கு வகை வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
மேலும் தபால் நிலையம், அருங்காட்சியகம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதன் செயல்பாடுகளை கண்கூடாகக் காண்கி்ன்றனர்.
உயர் வகுப்பு மாணவர்களுக்கு செயற்கையாக செய்யப்பட்ட மனித உறுப்புகள் கொண்டு மனித உடலின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படுகிறது. இது தவிர அறிவியல் உண்மைகளைக் கூறும் சி.டி.க்கள் காண்பிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான கற்பித்தல் முறை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இவ்வாறு புத்தகமின்றி விதவிதமாக பாடம் நடத்துவதால் மாணவர்கள் விடுமுறையே எடுப்பதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாணவர்கள் கூறியதாவது,
முதலில் புத்தகமில்லாமல் ஆசிரியர்கள் என்ன பாடத்தை சொல்லித் தரப்போகிறார்கள் என்று நினைத்தோம். வாழ்க்கைக்குத் தேவையான பல தகவல்களை தற்போது வகுப்பறைகளில் தெரிந்து கொள்கிறோம். உற்சாகமாக பள்ளிக்கு வருகிறோம். யோகா, உடற்பயிற்சி செய்கிறோம். அருங்காட்சியகம், தபால் நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றிற்கு சென்று பல தகவல்களைத் தெரிந்து கொள்கிறோம்.
புத்தகம் வரும்பொழுது வரட்டும். நாங்கள் புத்தகச் சுமையில்லாமல் சந்தோஷமாக கல்வி கற்கிறோம் என்றனர்.
மாணவர்கள் புத்தகச் சுமையால் கூன்போட்டு நடக்காமல், மகிழ்ச்சியாக வெறுங்கையை வீசிக் கொண்டு வீறு நடைபோடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக