சென்னை, ஜூலை.28: நாளை பள்ளிகள் திறந்திருக்கும் என்று தமிழக நர்சரி, தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர் கிறிஸ்துதாஸ் தெரிவித்தார்.சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி நாளை மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று திமுக அழைப்பு விடுத்துள்ளது.இதுதொடர்பாக கிறிஸ்துதாஸ் அளித்த பேட்டியில், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமானதாக இல்லை என்று மாணவர்களுக்கு அந்த புத்தகங்களை அரசு வழங்கவில்லை. இந்த வழக்கில் இன்னும் இறுதித்தீர்ப்பு வரவில்லை.இந்த நிலையில் மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது என்றார்.நாளை தனியார் சுயநிதி பள்ளிகள் தொடர்ந்து இயங்கும். அதற்கு யாரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. வழக்கம்போல் நர்சரி, தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் திறந்திருக்கும் என கிறிஸ்துதாஸ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக