கம்பம், ஜூலை 27:÷சமச்சீர் கல்வியை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கம்பம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ÷ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர் கூட்டணி வட்டாரக் கிளைத் தலைவர் ஏ.ஜெகநாதன் தலைமை வகித்தார். கள்ளர் பள்ளிகளின் சங்கக் கிளைத் தலைவர் எஸ்.மல்லையராஜா முன்னிலை வகித்தார். நகரக் கிளைச் செயலாளர் பி.ஜோசப்ராஜ் வரவேற்றார். ÷மாவட்டச் செயலாளர் சு.நந்தகோபால், கள்ளர் பள்ளிகளின் மாவட்டக் கிளையின் பொருளாளர் எம்.பி.புதியவன் ஆகியோர் பேசினர். ÷ஆர்ப்பாட்டத்தில், நடப்பு கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, முந்தைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். 6-வது ஊதிய மாற்றக் குறைபாடுகளை களைந்திடவும், மத்திய அரசு ஊழியர்களுக்குச் சமமாக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவும், வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு முறையை தொடர்ந்து அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ÷கள்ளர் பள்ளிகளின் சங்கக் கிளைச் செயலாளர் ரா. ராஜ்குமார் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக