தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிலேயே ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஏற்கெ னவே தயாரிக்கப்பட்டுள்ள பொதுப்பாடத்திட்ட புத்தகங்களில் உரிய மாற்றங்கள் செய்து, ஜூலை 22ம் தேதிக்குள் அனைத்து மாணவர் களுக்கும் சமச்சீர் கல்வி பாடத்திட்ட புத்தகங் கள் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. பழைய பாடத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. சமச்சீர் கல்வி தமிழகத்தில் நடப்பாண்டி லேயே அமலாக வேண்டும் என்று விரும்பும் சமூக நீதி ஆர்வலர்கள் மட்டுமின்றி, மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அனைவருமே இந்தத்தீர்ப்பை வரவேற் பார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட வேண்டிய பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டன. திறந்தபிறகும் இதுவரை ஆசிரியர்கள் எந்தப்பாடத்தையும் நடத்தமுடியாத நிலை. பொதுப்பாடத்திட்டத்திற் கான பாடப்புத்தகங்கள் ஏற்கெனவே அச்சடிக் கப்பட்டு தயார்நிலையில் உள்ள நிலையில், பாடப்புத்தகங்களை உடனடியாக விநியோகிப் பதிலும், வகுப்புகளில் முறையான பாடங்களை நடத்துவதிலும் எந்த சிரமமும் இருக்கப்போவ தில்லை. பழையப் பாடத்திட்டமா? புதியப் பாடத் திட்டமா? என்ற குழப்பத்திலிருக்கும் மாணவர் களும், பயிற்றுவிக்கவேண்டிய ஆசிரியர்களும் குழப்பமின்றி பாடம் நடத்த ஏதுவாக இருக்கும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியுள்ளார். உயர்நீதிமன்றம் ஏற் கெனவே பொதுப்பாடத்திட்டத்தை அமல்படுத்து மாறு கூறிய நிலையில், தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதி மன்றம் கூறியதன் அடிப்படையில்தான் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர்களை நியமித்ததும் தமிழக அரசுதான். இப்போதும் கூட உயர்நீதிமன்றம் நிபுணர்களின் பரிந்துரை அடிப் படையில் உரிய மாற்றங்களை செய்துகொள்ள அனுமதி வழங்கியுள்ளது. இவ்வளவுக்குப்பிறகும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்காமல் மேல்முறையீடு செய்யப் போவதாக கூறுவது எந்த வகையிலும் நியாய மல்ல. உச்சநீதிமன்றம், இரண்டு வார காலத்திற் குள் நிபுணர்குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறி, ஒருவார காலத்திற்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது மாணவர் களின் எதிர்காலத்தை மனதில்கொண்டுதான். இதுவே தேவையற்ற காலதாமதம் என்று மாண வர்களும் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மேல்முறையீடு செய்வது என்பது மேலும் தேவையற்ற காலதாமதத்தை யும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். இதுஒரு சொத்து சம்பந்தப்பட்ட சிவில் வழக்கு அல்ல. மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. இந்த ஆண்டு அச்சடிக்கப் பட்ட பொதுப்பாடத்திட்டத்தை திருத்தங்களு டன் நிறைவேற்றிக்கொண்டே, அடுத்த ஆண்டு அரசு கூறுவது போல முழுமையான சமச்சீர் கல்வியை செயல்படுத்த முடியும். இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று வகுப்புகள் துவங்க வழி செய்வதே பொருத்தமானதாக இருக்கும். |
7/19/2011
பிள்ளைகள் படிக்கட்டும்
லேபிள்கள்:
Educational News
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக