நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் ஏற்படும் காலதாமத்தால் 6 லட்சம் பீடி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ.7 கோடியை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனு்ப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
பீடி சுற்றும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை மொத்தமாக வரவு வைக்கப்பட்டு மாணவ, மாணவியருக்கு வழக்கப்பட்டு வந்தது. ஆனால் இதன் மூலம் பல லட்சம் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து 2010-2011ம் கல்வி ஆண்டு முதல் உதவித் தொகை பெற வங்கிகளில் பெற்றோர் பெயருடன் சேர்ந்து கூட்டு கணக்கு தொடங்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பீடி தொழிலாளர்களின் குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பூஜ்யம் இருப்பில் சேமிப்பு கணக்கு தொடங்க விண்ணப்பித்தனர்.
லட்சக்கணக்கில் வந்த விண்ணப்பங்களைப் பார்த்த வங்கி அதிகாரிகள் அவற்றை சம்பந்தப்பட்ட வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு விண்ணப்பத்தை சரி பார்த்த பின் கம்யூட்டர் மூலம் கணக்கு தொடங்கி மீண்டும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் வங்கிகளில் கணக்கு தொடங்க விண்ணப்பித்தும் பாஸ் புக் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வங்கிக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.
2011-2012-ம் கல்வியாண்டு துவங்கி 2 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த கல்வியாண்டிற்குரிய கல்வி உதவித் தொகை பெற முடியாமல் மாணவர்கள் அலைக்கழிக்கபடுகின்றனர். மேலும் கால தாமதத்தால் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7 கோடி கல்வி உதவித் தொகை மீண்டும் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவும் 6 லட்சம் பீடி சுற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் நலன் கருதியும் 2010-2011ம் கல்வி ஆண்டிற்குரிய கல்வி உதவித் தொகையை கடந்த ஆண்டைப் போல் பள்ளிகள் மூலமாகவோ அல்லது மணியார்டர் மூலமாகவே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடப்பு கல்வியாண்டிற்குரிய கல்வி உதவித் தொகையை வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பீடி சுற்றும் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக