கடலூர் : ஆசிரியர்களின் வருகை பதிவை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவை செல்போன் மூலம் கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேசிய தகவல் மையத்துக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பும் முறை கடந்த ஒரு மாத காலமாக சோதனை அடிப்படையில் நடந்து வந்தது.
இதையடுத்து, இன்று முதல் எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை, முறையான நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேசிய தகவல் மையத்துக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் 14 பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒரு முறைகூட எஸ்.எம்.எஸ் அனுப்பாதது குறித்து கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர் பயிற்றுனர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் தினந்தோறும் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக