திண்டுக்கல், ஜூலை 30: திண்டுக்கல் அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அக்கவுன்டன்ட் பணிக் காலியிடங்களுக்கு பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர். இது குறித்த சரிபார்ப்பினை, திங்கள்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் கு. நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.அக்கவுன்டன்ட் பணி : பி.காம். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று, கணினியில் டேலி சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். பதிவுதாரர் கணினி தொடர்பான சான்றிதழைப் பதிவு செய்த தேதியே பதிவு மூப்பாகக் கணக்கிடப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. முற்பட்ட வகுப்பினர் 1.7.2011 அன்று 30 வயதுக்குள்பட்டவராக இருக்கவேண்டும். 26.7.2011-ம் தேதி வரை பதிவு செய்த அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவையினர் மற்றும் கலப்புத் திருமண தம்பதியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தோர், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சேர்ந்தவர்கள், மொழி போராட்டத் தியாகிகளது வாரிசுகள், தமிழ் மொழிக் காவலர்களது வாரிசுதாரர்கள், நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள், அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் ஆகிய முன்னுரிமைப் பிரிவின் கீழ் பதிவு செய்த பின்தங்கிய வகுப்பினரில், முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள், மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஜூலை 26-ம் தேதி வரை பதிவு செய்தவர்கள் மற்றும் அதே முன்னுரிமைப் பிரிவைச் சேர்ந்த பின்தங்கிய வகுப்பினரில் முஸ்லிம் தவிர இதர வகுப்பின்ர் மற்றும் அனைத்து வகுப்பினரும் 2008 ஜனவரி 28-ம் தேதி வரை பதிவு செய்தவர்கள், உத்தேச பதிவு மூப்புக்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர்.முன்னுரிமையற்றோர் பிரிவு: ஆதிதிராவிடர் வகுப்பினர் ஆண், பெண் இருபாலரும் 24.6.1998 முடிய பதிவு செய்தவர்களும், அதே வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 26.7.2011 முடிய பதிவு செய்தவர்களும், மிகவும் பின்தங்கிய வகுப்பினரில் ஆண், பெண் இருபாலரும் 3.11.2000 முடிய பதிவு செய்தவர்களும், அதே வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 26.7.2011 முடிய பதிவு செய்தவர்கள், பின்தங்கிய வகுப்பினரில் முஸ்லிம் தவிர, இதர வகுப்பினர் ஆண், பெண் இருபாலரும் 5.8.1997 முடிய பதிவு செய்தவர்களும், அதே வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளில் பெண்கள் 19.12.2001 முடிய பதிவு செய்தவர்கள், ஆண்களில் 29.4.1999 முடிய பதிவு செய்தவர்கள், அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் 23.12.1998 முடிய பதிவு செய்தவர்கள், அதே வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 16.5.2003 முடிய பதிவு செய்தவர்கள், முன்னுரிமையற்ற பிரிவினரில் உத்தேச பதிவு மூப்புக்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் மேல்நிலைத் தேர்ச்சி பெற்று, கணினியில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும், பதிவுதாரர் கணினி தொடர்பான சான்றிதழைப் பதிவு செய்த தேதியே பதிவு மூப்பாகக் கணக்கிடப்படும். ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடி வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. முற்பட்ட வகுப்பினர் 1.7.2011 அன்று உள்ளபடி 30 வயதுக்குள்பட்டவராக இருக்கவேண்டும்.முன்னுரிமையுள்ள பிரிவு பதிவு மூப்பு: 26.7.2011 வரை பதிவு செய்த அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவையினர், கலப்பு திருமண தம்பதியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள், ராணுவத்தில் பணிபுரிபவரைச் சேர்ந்தவர்கள், மொழிப் போராட்டத் தியாகிகளது வாரிசுதாரர்கள், தமிழ் மொழிக் காவலர்கள் வாரிசுதாரர்கள், நில ஆர்ஜிதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள், அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் முன்னுரிமைப் பிரிவின் கீழ் பதிவு செய்த ஆண், பெண் இருபாலரும் உத்தேச பதிவு மூப்புக்கு தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். முன்னுரிமையற்றோர் பிரிவில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் 26.7.2011 முடிய பதிவு செய்தவர்கள், உத்தேச பதிவு மூப்புக்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக