சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்பழையனூரில் நடந்த மருத்துவ முகாமிற்கு, மாவட்ட கல்வி அலுவலரை செல்லுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். "ஏழு மாத கர்ப்பிணியான என்னால் குண்டும் குழியுமான ரோட்டில் செல்ல முடியாது... குழந்தைக்கு பிரச்னை ஆகிவிடும்' என, கல்வி அலுவலர் மறுத்தார். "மருத்துவ முகாமிற்கு கட்டாயம் போய் வர வேண்டும்' என, கட்டாயப்படுத்தியதால் அவரும் சென்று வந்தார்.
மறுநாள், அந்தப் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் உள்ள குழந்தை இறந்து பிறந்தது.
இதனால், அவர் மருத்துவ விடுமுறையில் சென்று விட்டார்.இந்தப் பிரச்னை பெரிய புகாராக போய்விடுமோ என்ற நடுக்கத்தில், மாவட்ட கல்வி அலுவலர் இருந்து வருகிறார்.
இதைக் கண்ட ஊழியர் ஒருவர், "நம்ம ரோட்டைப் பத்தி தான் தெரியுமே... கர்ப்பிணிப் பெண்ணை கஷ்டமான பணிக்கு அனுப்புவானேன்... இப்ப, இப்படி கஷ்டப்படுவானேன்...' என, "கமென்ட்' அடித்தார்.
source dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக