இந்தியா முழுவதும் கலை மற்றும் அறிவியல் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் மக்களவையில் தெரிவித்தார்.
பொதுத் தேர்வினை நடத்தி, சிறந்த மாணவர்களுக்கான பட்டியலை தயாரிப்பதன் மூலம் கல்வியின் தரத்தை உயர்த்துவதே நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பொதுத் தேர்வு நடத்தப்பட்டால், இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே மத்திய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றார் அவர்.
தேசிய தொழில்நுட்பக் கழகச் சட்டத்துக்கு திருத்தம் கோரும் மசோதாவைத் தாக்கல் செய்து பேசுகையில் அமைச்சர் இந்த செய்தியை தெரிவித்தார்.
மேலும், போலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுத்து மூடப்படும், கல்லூரிகளில் சேர்க்க நன்கொடை வாங்குவது தடுக்கப்படும், பல்கலைக்கழகங்கள் குறித்து தவறான தகவல்களுடன் வரும் விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கபில் சிபல் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக