- University of Madras - UG (Regular stream) Exam Results - April 2011
- UNIVERSITY OF MADRAS April 2011 PG and Professional DEGREE Examinations Results
- Bharathiar University PG examinations April/May 2011
- Alagappa University, DDE Exams results exam held on May 2011
- Alagappa University Affiliated Colleges results exam held on April 2011
- Bharathiar University UG examinations April -2011
- Alagappa University Affiliated colleges results-2011
- Alagappa University Affiliated colleges PG course results held on Apr-2011
- UNIVERSITY OF MADRAS UG Revaluation results of November 2010 Examinations
- Annamalai University DDE Results
- Bharathiar University SDEexaminations Results Dec 2010
- Alagappa University DDE Revaluation results held on Dec-2010
9/30/2011
லேபிள்கள்:
தேர்வு முடிவுகள்
அகவிலைப்படி உயர்வு: ஓரிரு நாளில் அரசாணை
லேபிள்கள்:
DA jul 2011
அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 7 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை, கடந்த 15-ம் தேதி வழங்கியது. மத்திய அரசு வழங்கியவுடன் மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், 10 நாள்களுக்கு மேலாகியும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், அகவிலைப்படி உயர்வுக்கான அரசு உத்தரவு எப்போது வெளியாகும் என்பது குறித்த ஆவல் அரசு ஊழியர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வுக்கான கோப்புகள் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான அரசு உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகக்கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:
ஓட்டு போடுவதற்கு 14 ஆவணங்கள் அனுமதி
லேபிள்கள்:
தேர்தல்
தேனி : ஓட்டு போடுவதற்கு 14 ஆவணங்களை காட்டலாம், என தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், அரசு ஊழியர் அடையாள அட்டை, சுதந்திர போராட்ட தியாகி அடையாள அட்டை, போட்டோவுடன் கூடிய பட்டா மற்றும் பத்திரம், மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட ஆயுள் காப்பீட்டு அட்டை. இது தவிர 2011 மே 31க்குள் பெறப்பட்ட வங்கி பாஸ் புக், டிரைவிங் லைசென்ஸ், பென்ஷன் புக், எஸ்.சி., எஸ்.டி., சான்றிதழ், துப்பாக்கி லைசென்ஸ்,தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகிய 14 ஆவணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர வாக்காளர் புகைப்பட பூத் சிலிப் இருந்தால், வேறு எதுவும் தேவையில்லை. வீட்டில் ஒரு வருக்கு இந்த ஆவணங்கள் இருந்தால் போதும். மற்றவர்களும் ஓட்டளிக்கலாம்.
Thanks: Dinamalr

Cabinet decision: Railway employees to get Productivity Linked Bonus equivalent to 78 days of wages.
லேபிள்கள்:
இணையச்செய்திகள்
The Union Cabinet has accepted the proposal of the Ministry of Railways for payment of Productivity Linked Bonus (PLB) equivalent to 78 days' wages for the financial year 2010-2011 for all eligible non-gazetted Railway employees.
The financial implication of payment of 78 days' PLB to railway employees has been estimated to be Rs.1098.58 crore. The wage calculation ceiling prescribed for payment of PLB to the eligible non-gazetted railway employees is Rs.3500/- p.m.
About 12.61 lakh non-gazetted Railway employees are likely to benefit from the decision.
Payment of PLB to eligible railway employees is made each year before the Dusshera/ Puja holidays. The decision of the Cabinet shall be implemented before the holidays for this year as well.
This will be the highest PLB payment ever to be made by Railways. PLB is based on the productivity indices reflecting the performance of the Railways and its payment is expected to motivate the employees for working towards improving the same in future.
Source : PIB

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான விடைகள் வெளியீடு: 75 ஆண்டுகளில் முதல் முறை
லேபிள்கள்:
தேர்வு முடிவுகள்
Tentative Answer keys - Latest Updates
Click on the name of the post to know the tentative Answer KeysSl.No. | Name of the Post | Date of Written Exam | Date of Publication |
01 | 25.09.2011 | 29.09.2011 |
Go. Ms. No. 268
லேபிள்கள்:
G.O.
Go. Ms. No. 268 Dt : September 29, 2011 | State Public Sector Undertakings – Sanction of Bonus & Ex-gratia to the employees of State Public Sector Undertakings for 2010-11 - Payable during 2011-12 - Orders issued. |
வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டால் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் தேர்தல் காலங்களில் முற்றிலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். போட்டியிடும் எந்த வேட்பாளருக்கோ, அரசியல் கட்சிக்கோ ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அவ்வாறு எந்த ஒரு அரசு ஊழியராவது போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஈடுபடுவதாக தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
9/28/2011
அறிவிப்பு
லேபிள்கள்:
அறிவிப்பு
எமது SMS சேவை தங்களுக்கோ அல்லது தங்கள் நண்பர்களுக்கோ தற்சமயம் கிடைக்கவில்லையென்றால் அவரவர் செல்லிட பேசியில் STOP DND என type செய்து 1909 SMS அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு 9486 44 9129 என்ற எண்ணிற்கோ அல்லது tnptfmuthupandian@gmail.com என்ற e-mail ல்லோ தொடர்பு கொள்ளவும்.
NOTICE: If you have not received any sms from me, plz send the following sms STOP DND to 1909. Plz forward to your friends. By MP@TNPTF
பி.எட்., எம்.எட். மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு
லேபிள்கள்:
Educational News
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்றுள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். மறுமதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை http://www.tnteu.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
source: kalvi malar

டிரான்ஸ்பார்மர் மீது பள்ளி வேன் மோதல்: 6 குழந்தைகள் காயம்
லேபிள்கள்:
பத்திரிக்கைச்செய்தி
மதுரை: மதுரை பைபாஸ் ரோடில், தனியார் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த வேன், பொன்மேனி அருகே சாலையோர டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் மாணவர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
source: dinamalar
source: dinamalar
PFRDA மசோதா எதிர்ப்புக் கருத்தரங்கம் - 26-09-2011
லேபிள்கள்:
TNPTF NEWS

பள்ளிகளில் இனி மதிப்பெண்களுக்கு பதில் கிரேடு முறை: அரசு உத்தரவு
லேபிள்கள்:
Educational News
சென்னை: 2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பள்ளி்க் குழந்தைகள் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையை தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் முப்பருவ முறை (Trimester pattern) அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில் மாணவர்கள் மொட்டைப் மணப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதற்கு பதிலாக அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரேடு முறையை அரசு அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் டி. சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது,
பள்ளி மாணவர்கள் குருட்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறும் முறையை மாற்றி அவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டு முறையை (கிரேடு சிஸ்டம்) கொண்டு வருவது தொடர்பாக தமிழக அரசு, நிபுணர் குழுவை அமைத்தது. அந்த நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை விவரம் வருமாறு:-
தற்போதைய தேர்வுமுறை மாணவர்களின் நினைவாற்றலை மையப்படுத்தியே அமைந்துள்ளது. மேலும், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வு வினாக்களும் மாணவர்கள் எளிதாக கண்டறியும் வகையிலேயே உள்ளன. இதன் காரணமாக, மாணவர்களால் பாடத்தை தாண்டி வெளியே படிக்க முடியவில்லை.
அரசு பொதுத் தேர்வுகளாலும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல், தேர்வில் தோல்வி காரணமாக தவறான முடிவு எடுப்பதற்கும் இட்டுச் செல்கிறது. இதைத் தவிர்க்க தொடர் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீடு முறை கொண்டுவர வேண்டியது அவசியம் ஆகும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பில் ஏற்கனவே இந்த முறை அமலில் உள்ளது. மேலும், கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் இந்த முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்த முறையின்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் 3 பருவங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை 2-ம் பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 3-ம் பருவம். இந்த பருவங்களில் உடனடி மதிப்பீடு, பருவ இறுதி மதிப்பீடு என இரண்டு வகையான மதிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
உடனடி மதிப்பீட்டுக்கு 40 மதிப்பெண்களும், பருவ இறுதி மதிப்பீட்டுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்பட வேண்டும். கற்பனைத் திறனை வளர்க்கும் நடவடிக்கைகளான விளையாட்டு, நாடகம், பாடல்கள் போன்றவை உடனடி மதிப்பீட்டிலும், தேர்வுகள் பருவ இறுதி மதிப்பீட்டிலும் இடம்பெற வேண்டும். இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப கிரேடு வழங்கப்பட வேண்டும்.
55 முதல் 60 மார்க் வரை - ஏ 1 கிரேடு (பாயிண்ட் 10)
49 முதல் 54 வரை - ஏ 2 கிரேடு (பாயிண்ட் 9)
43 முதல் 48 வரை - பி 1 கிரேடு (பாயிண்ட் 8)
37 முதல் 42 வரை - பி 2 கிரேடு (பாயிண்ட் 7)
31 முதல் 36 வரை - சி 1 கிரேடு (பாயிண்ட் 6)
25 முதல் 30 வரை - சி 2 கிரேடு (பாயிண்ட் 5)
19 முதல் 24 வரை - டி கிரேடு (பாயிண்ட் 4)
13 முதல் 18 வரை - இ 1 கிரேடு (பாயிண்ட் இல்லை)
12 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண் - இ 2 கிரேடு (பாயிண்ட் இல்லை)
மூன்று பருவங்களின் முடிவில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் கிரேடு சராசரி அடிப்படையில் ஆண்டு இறுதியில் கிரேடு வழங்கப்பட வேண்டும். ஒரு பருவத்தில் எடுக்கப்படும் பாடங்கள் அடுத்த பருவத்திற்கு வராது. இதனால், ஆண்டு தேர்வுக்கான முக்கியத்துவம் குறையும். இதுபோல, 10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளையும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளில் கல்லூரிகளில் இருப்பதைப் போன்று செமஸ்டர் முறையையே அறிமுகப்படுத்தலாம்.
நிபுணர் குழு அளித்த மேற்கண்ட பரிந்துரைகளை ஆராய்ந்த அரசு மதிப்பெண்ணுக்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் கல்வி ஆண்டு முதல் (2012-13) ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2013-14) 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறையை கொண்டுவர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளில் இருப்பதைப் போல அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ தேர்வு முறை (டிரெமஸ்டர் சிஸ்டம்) நடைமுறைப்படுத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9/27/2011
தள்ளிப் போகிறது பத்தாம் வகுப்பு தேர்வு
லேபிள்கள்:
Educational News
கோவை: சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, கற்பிக்கும் நாட்கள் குறைந்து போனதால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2012 ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள கல்வியாண்டு காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், முதல் மற்றும் 10ம் வகுப்புகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட சமச்சீர் கல்வி, பெரும் சர்ச்சைகளுக்குப் பின், இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய கல்வி முறையை நடைமுறை படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால், 183 ஆக இருந்திருக்க வேண்டிய கற்பித்தல் நாட்களின் எண்ணிக்கை, 123 ஆகக் குறைந்தது.
அறுபது நாள் இழப்பை ஈடுகட்ட, இந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2012 ஏப்ரல் வரை, மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளை, பணி நாளாக கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 17 நாள் கிடைக்கிறது. ஏப்ரல் 2012ல் பணி நாட்கள் நீட்டிக்கப்படவுள்ளன. 2012 ஏப்., 18 முதல் ஏப்., 28 வரை நீட்டிக்கப்படும் பணி நாட்கள் மூலம் மேலும் 10 நாள் கிடைக்கிறது. அடுத்தபடியாக காலாண்டு தேர்வு விடுமுறையிலும் கைவைத்துள்ளது அரசு.
வழக்கமான 10 நாள் விடுமுறை, இந்த ஆண்டு ஐந்து நாளாகக் குறைக்கப்படுகிறது. இதன் மூலமும் ஐந்து நாள் கிடைக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளின் வாயிலாக, கூடுதலாகக் கிடைக்கும் 32 நாள், இழந்த 60 நாள், கற்பித்தல் நாட்களில் ஈடுகட்டப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, தினமும் 35 நிமிடம் கூடுதலாக வகுப்பு நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவால், மேலும் 16 நாள் கூடுதலாகக் கிடைக்கிறது. இந்த மாற்று ஏற்பாடுகளால் தேர்வு நாட்கள் மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் போக, கற்பித்தல் நாட்கள் 197 ஆக உயர்ந்துள்ளது.
35 நிமிடங்கள் தேவையா? முப்பத்தைந்து நிமிட கூடுதல் வகுப்பு நேரத்தை, ஒவ்வொரு பள்ளியும் வெவ்வேறு விதமாக பயன்படுத்துகின்றன. தற்போது நடத்தும் வகுப்புகளின் நேரத்தை, சில பள்ளிகள் நீட்டித்துள்ளன. வேறு சில பள்ளிகளோ, மாலை வழக்கமாக பள்ளி முடிந்தவுடன், மேலும் 35 நிமிடம் கூடுதல் வகுப்பு நடத்துகிறது. பள்ளி முடியும் நேரம் இதனால் மாற்றத்துக்கு உள்ளாவதால், பள்ளி முடிந்தவுடன் பஸ்சை பிடித்து வீடு போய் சேர்வதில் சில மாணவர்களுக்கு பிரச்னை உள்ளது. அதனால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு, பள்ளிகளுக்கு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பாடமும் கம்மி தான்: கற்பித்தல் நாள் குறைந்து போனதால், இந்த ஆண்டு தேர்வுகளில், பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பாடங்கள், காலாண்டு தேர்வில் 25 சதவீதமும், அரையாண்டு தேர்வில் 40 சதவீதமும், இறுதியாண்டு தேர்வில் 35 சதவீதமும் மாற்றப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பாடங்கள், காலாண்டில் மட்டும் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில் மாற்றம்: வழக்கமாக மார்ச் மாதம் நான்காம் வாரம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். சமச்சீர் கல்வி இடைவெளியால் கற்பித்தல் நாட்களில் ஏற்பட்டுள்ள வேறுபாடு காரணமாக, இந்த முறை 2012 ஏப்., முதல் வாரம் தேர்வு நடத்தப்படலாம் என, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள கல்வியாண்டுக்கான புதிய காலண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பாடங்களை முடித்து மீளாய்வு செய்ய வேண்டுமே என்ற கவலை ஆசிரியர்களை தொற்றிக் கொண்டுள்ளது.
மொத்த பணி நாள்: 221, உள்ளூர் விடுமுறை: 3, தேர்வு நாட்கள் : 24
மொத்த கற்பித்தல் நாட்கள்: 197

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)