அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 7 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை, கடந்த 15-ம் தேதி வழங்கியது. மத்திய அரசு வழங்கியவுடன் மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், 10 நாள்களுக்கு மேலாகியும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால், அகவிலைப்படி உயர்வுக்கான அரசு உத்தரவு எப்போது வெளியாகும் என்பது குறித்த ஆவல் அரசு ஊழியர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வுக்கான கோப்புகள் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான அரசு உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகக்கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக