சென்னை, செப்.26: மத்திய அரசு அறிவித்ததைப் போன்று, தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை என நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்வினை கடந்த 15-ம் தேதி அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்போவதில்லை என நிதித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் மீதுள்ள மிகையளவு கடன் சுமையே இந்த அகவிலைப்படி உயர்வு வழங்காமைக்கு காரணம் என நிதித் துறை அதிகாரிகள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக