சமச்சீர்கல்வி பாடப்புத்தகங்களின் தரத்தை மேம்படுத்துவது குறித்து, பாட நிபுணர்கள் அடங்கிய குழு, நேற்று முன்தினம் முதல் ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, 19ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து தரத்தை உயர்த்துதல் மற்றும் சி.சி.இ., (கன்டினிவஸ் காம்ப்ரஹென்சிவ் எவாலுவேஷன்) திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய பாடப் பொருள்கள் குறித்து அறிக்கை தயாரித்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழுவில் யார், யார்? கல்லூரி பேராசிரியர்கள், பாட ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை மாவட்டம்தோறும் அமைத்து, பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் சேர்த்தல் மற்றும் சி.சி.இ., திட்டத்திற்கான பகுதிகள் குறித்து ஆய்வு செய்யும் பணி, நேற்று முன்தினம் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கியது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் நடைபெறும் இந்த ஆய்வுப் பணிகள், 15ம் தேதி வரை நடைபெறுகின்றன. இது தொடர்பான அறிக்கையை, 19ம் தேதிக்குள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என, இத்துறையின் இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேவராஜன் அனுப்பியுள்ள உத்தரவு: மாணவர்கள் கருத்து முக்கியம்: நிபுணர் குழுவில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைச் சேர்ந்த பாட வல்லுனர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். முதுகலை ஆசிரியர்களையும், குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.பாடப்புத்தகங்களில் உள்ள பிழைகளை கண்டறிதல், தேவையற்ற பகுதிகளை நீக்குதல், தேவையான பகுதிகளை சேர்த்தல் ஆகியவை குறித்து, நிபுணர் குழு அறிக்கை தயாரிக்க வேண்டும். இது தொடர்பாக, மாணவர்களிடம் கருத்துக்களை பெறுவது மிகவும் அவசியம். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
இரண்டு படிவங்கள்: நீக்குதல் மற்றும் சேர்த்தல் தொடர்பான விவரங்களை பதிவு செய்யவும், சி.சி.இ., திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய செய்முறை திட்டங்களை பதிவு செய்யவும் தனித்தனியாக இரண்டு படிவங்கள், நிபுணர் குழுவுக்கு தரப்பட்டுள்ளன.மாநிலம் முழுவதும் இருந்து பெறும் அறிக்கை மீது, உயர்மட்டக் குழு, சென்னையில் கூடி ஆலோசனை நடத்தி, இறுதி முடிவு எடுக்க உள்ளது. இந்த சீர்திருத்தங்கள், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக