மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பூரண சவுந்தரி தாக்கல் செய்த மனு:விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2010 ல் எம்.பி.பி.எஸ்.,சேர்ந்தேன். ஆகஸ்ட்டில் முதலாமாண்டு தேர்வு நடந்தது. தேர்வில் புதிய நடைமுறையை எம்.ஜி.ஆர்.,மருத்துவ பல்கலை அறிமுகப்படுத்தியது. மொத்தம் 3 பாடங்களில் தலா 5 பேப்பர்கள் உள்ளன. இதில் தலா 50 மதிப்பெண் பெற வேண்டும் என பல்கலை உத்தரவிட்டது. சராசரியாக 50 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதுமானது. புதிய தேர்வு நடைமுறையால் என் போன்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். இரண்டாம் ஆண்டில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என, இவர் உட்பட 23 பேர் மனு செய்தனர்.மனுக்கள் நீதிபதி ராஜா முன் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் அஜ்மல்கான், லஜபதிராய், காந்தி ஆஜராகினர். மருத்துவ பல்கலை புதிய தேர்வு நடைமுறைக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். பதிலளிக்க பல்கலைக்கு உத்தரவிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக