சென்னை: மாவட்ட கல்வி நிர்வாகத்தின் கெடுபிடி இல்லாததால், பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளில், பல்வேறு விதமாக அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இவற்றை செலுத்தாதவர்களுக்கு, தேர்வெழுதவும், இலவச சைக்கிள் உள்ளிட்ட சலுகைகளும் மறுக்கப்படுகின்றன. பெரும்பாலான நிதியுதவி பெறும் பள்ளிகள், தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களிடமே, ஓர் ஆண்டுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கின்றன. நன்கொடை வசூல் குறித்து, மாணவர் சேர்க்கையின்போது புகார் எழுந்தால், பள்ளியின் நற்பெயர் கெடும் என்பதால், அப்போது குறைந்த கட்டணத்தை பெற்று, மாணவர் சேர்க்கை நடத்தி விடுகின்றனர். பள்ளி துவங்கி இரண்டு மாதங்கள் கழித்து, மீண்டும் கட்டணத்தை செலுத்த மாணவ, மாணவியரை வற்புறுத்த துவங்கிவிடுகின்றன. இதுகுறித்து, மாவட்ட கல்வி நிர்வாகமும், உதவி பெறும் பள்ளிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் சிலர் கூறியதாவது: மாநகர பகுதிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள் பெரும்பாலும், உதவி பெறுபவையாகவே உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள், அரசு பள்ளிகளில் சேர, 4 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளதால், உதவிபெறும் பள்ளிகளிலேயே படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.
இதை பயன்படுத்தி, பள்ளி நிர்வாகமும், ஆயிரக்கணக்கில் கட்டணம், நன்கொடை என கட்டாயப்படுத்துகிறது. மாணவர் சேர்க்கையின்போது, குறைந்த கட்டணம் வசூலிக்கும் இவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி, மாணவர்களை தேர்வெழுதவோ, பள்ளி வகுப்பறைக்கு செல்லவோ அனுமதிப்பதில்லை.
சைக்கிள் உள்ளிட்ட சலுகைகளும், அனைத்து கட்டணங்களும் கட்டிய பின்பே வழங்கப்படுகிறது. மேலும், முழு ஆண்டு தேர்வின் போதும், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு, ஹால் டிக்கெட் வழங்குவதில்லை.
இதுகுறித்து, மாவட்ட கல்வி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தாலும் எவ்வித பயனும் இல்லை. இதனால் பல மாணவ, மாணவியர் படிப்பை பாதியில் கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க உதவிபெறும் பள்ளிகளின் வசூல் வேட்டையை கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அப்பகுதிகளில் அரசு பள்ளிகள் தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக