சென்னை: முதல்கட்ட மாதிரி பள்ளிகளின் கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருவதால், தமிழகத்தில் இரண்டாம் கட்ட மாதிரி பள்ளிகள் துவக்கம் கேள்விக்குறியாகியுள்ளது.
கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தமிழகத்தில் முதல்கட்டமாக, 18 மாதிரி பள்ளிகள் அமைக்க, ஒரு பள்ளிக்கு தலா ரூ.3.77 கோடி வீதம், ரூ.67.86 கோடி நிதி, 2009-10 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்காலிக பள்ளிக்கட்டடத்தில் துவக்கப்பட்ட இப்பள்ளிகளில், கேந்திரிய வித்யாலயா தரத்தில் ஆங்கில வழிக்கல்வி தரத்துடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வகுப்புக்கு, 40 மாணவ - மாணவியர் வீதம் சேர்க்கப்பட்டனர்.
இதற்கான கட்டுமானப் பணிகள் துவங்கிய போதிலும், மிக மந்தமாக நடந்து வருகின்றன. பெரும்பாலான பள்ளிகளில், 10 சதவீதம் கூட பணி நிறைவு பெறவில்லை. இதனால், அடுத்த ஆண்டில் கூட, சொந்தக் கட்டடத்தில் நடத்துவது இயலாத காரியமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த கல்வியாண்டிலேயே, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் மேலும் 26 மாதிரி பள்ளிகள் அமைக்க, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இரண்டாம் கட்ட மாதிரி பள்ளிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்வதிலும், பலவித சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. கட்டடம் கட்டாமல் தற்காலிகமாக துவக்கினால், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், கட்டி முடித்த பின்பே, இரண்டாம் கட்ட மாதிரி பள்ளிகள் துவக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், எதிர்வரும், 2012-13 கல்வியாண்டில் கூட, இரண்டாம் கட்ட மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது இயலாத காரியமாகிவிட்டது. அனுமதியளித்து இரண்டு ஆண்டுகளாகியும், இப்பள்ளிகள் துவக்க இயலாமல் இருப்பது, அப்பகுதி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: கல்வி மலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக