சத்துணவுத் திட்டத்தில், மாணவர்களுக்கு தினமும் விதவிதமான உணவு வழங்கும் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சத்துணவு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
நாக்கு செத்துப் போச்சு!
தற்போது, தினமும், சாதம், சாம்பார், வாரத்தில் ஐந்து நாட்களும் முட்டை வழங்கப்படுகிறது. ஒரே மாதிரியான உணவு வழங்குவதால், சத்துணவில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஆகையால், தினமும் விதவிதமான உணவு வகைகளை வழங்க, முந்தைய அரசு முடிவு செய்தது.முதற்கட்டமாக, 2009, அக்டோபரில், சென்னை திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, ஆறு பள்ளிகளில், சோதனை ரீதியாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, சாம்பார் சாதம், காரக்குழம்பு, பிரிஞ்சி, புளிசாதம், மிளகுதூள் தூவிய முட்டை என, தினமும் விதவிதமான உணவு வழங்கப்பட்டது. இதற்கு, மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், தமிழகம் முழுவதும் இதை அமல்படுத்த, அரசு பரிசீலித்து வந்தது.
அடுத்த ஆண்டு முதல்?
இதற்கிடையே, கடந்த ஆண்டு இறுதியில், சமூகநலத்துறை இயக்குனர் மாற்றப்பட்டதை அடுத்து, விதவிதமான உணவு திட்டம், நிறுத்தப்பட்டது.புதிய அரசு பொறுப்பேற்றதும், மாணவர்களுக்கான சத்துணவுத் திட்ட செலவுத் தொகையை உயர்த்தி வழங்கியதுடன், மீண்டும் விதவிதமான உணவு வகைகளை வழங்கவும், தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, சத்துணவு நிபுணர்களுடன், சமூக நலத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறும்போது, "சோதனை ரீதியாக, சென்னையில் நடத்தப்பட்ட விதவித உணவு வழங்கும் திட்டம், செலவு அதிகரித்ததால், நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, திட்டத்தை மறு சீரமைப்பு செய்து, நடைமுறைப்படுத்த உள்ளோம்' என்றார்.புத்தாண்டின் துவக்கத்திலோ, அடுத்த கல்வியாண்டு முதலோ, இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ரீதியாக வழங்கிய உணவு
திங்கள் சாம்பார் சாதம், முட்டை வறுவல்
செவ்வாய் காரக்குழம்பு, அவித்த முட்டை
புதன் பிரிஞ்சி-பருப்பு அவியல், முட்டை தொக்கு
வியாழன் சாதம்-சாம்பார், பெப்பர் முட்டை
வெள்ளி புளிசாதம்-உருளை வறுவல், அவித்த முட்டை
நிதி ஒதுக்கீடும், பயனடைவோரும்...
* சத்துணவுத் திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 54.80 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
* இதற்காக, 1,278 கோடி ரூபாயை, பட்ஜெட்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக