தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையில் 3,135 ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 2010-11ம் கல்வி ஆண்டில் காலியாக இருந்த 1,792 இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் உரிய சீனியாரிட்டி, இன சுழற்சியுடன் 1:5 என்ற வீதத்தில் தகுதியானவர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்கள் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தொடக்க கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் 1.6.2011 நிலவரப்படி தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் காலியாக உள்ள 1,886 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 7 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 1,366 பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகின்றனர். 124 பேர் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்படுகின்றனர். மொத்தம் 3,135 ஆசிரியர்களை விரைவில் நியமிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.இதனால் ஏற்கனவே 1,792 இடைநிலை ஆசிரியர்கள், தற்போது 3,135 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 4,887 ஆசிரியர்களை நியமிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.மேலும், தமிழக சட்டசபையில், 5,423 ஆசிரியர்களை நியமனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தொடர்ந்து குழப்ப நிலையே நீடிக்கிறது. ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் இவர்கள் நியமனம் செய்யப்படுவாரா அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி எழுத்து தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவாரா என்பது தொடர்பாக அரசு இன்னும் தெளிவாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பி.எட் பட்டதாரிகள் இதனை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Source : Dinamalar
Source : Dinamalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக