கோவை : அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி,எஸ்டி மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதற்காக மாவட்ட வாரியாக உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். இவை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னர் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த முறையால் பல இடங்களில் கல்வி உதவி தொகை காலதாமதம் ஆகிறது என மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து அரசு சார்பில் என்ஐசி(நிக்&தேசிய தகவல் மையம்) வாயிலாக பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உதவித்தொகை வழங்கும் முறை கல்லூரிகளுக்கு மட்டும் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தாண்டு பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் உதவித்தொகை வழங்க ‘நிக்‘ சார்பில் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அருமைதாஸ் கூறுகையில், ‘‘பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனி சாப்ட்வேர், பாஸ்வேர்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். ஆவணங்கள் முறையாக இருந்தால் அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ஒரே செக்காக வங்கி மூலம் அனுப்பி விடுவோம். முதல்முறையாக கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது‘‘ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக