சிங்கம்புணரி, டிச. 8: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சிங்கம்புணரி வட்டார செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாரத் தலைவர் ஞானஅற்புதராஜ் தலைமை வகித்தார்.செயலர் பாலகிருஷ்ணன் வரவேற்றுப் பேசினார். துணைச் செயலர் பாலசுப்பிரமணியம் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டியன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் பொன். பால்துரை முன்னிலை வகித்தனர். ஆசிரியர்களின் பண பலன் நிலுவைகளை வழங்குவதில் காலம் தாழ்த்துவதைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர்கள் வைரம், ராகவன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ், முன்னாள் வட்டாரப் பொருளாளர் பாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்டாரப் பொருளாளர் சம்பத் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக