2012ம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள அனைத்து மேலாண்மைக் கல்வி மையங்களிலும் எம்.பி.ஏ. சேர்க்கைக்கு அவசியமாகும் காமன் மேனேஜ்மென்ட் ஆப்டிடியூட் டெஸ்ட் எனப்படும் சிமேட் தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.
சிமேட் நுழைவுத் தேர்வு 2012ல் பிப்ரவரி 20ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே எழுதக் கூடிய இந்தத் தேர்வு இந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 61 முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், டிசம்பர் 9ம் தேதி முதல் 2012 ஜனவரி 9ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். 2012 ஜனவரி 30ம் தேதி முதல் தேரவு நுழைவுச் சீட்டு பிரதியை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். சிமேட் நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் 2012 மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 11ம் தேதி வரை வெளியிடப்படும்.
அடுத்த கல்வியாண்டில் இருந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் எம்.பி.ஏ. சேர்க்கை சிமேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாக வைத்தே நடத்தப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ கூறியுள்ளது.
ஏஐசிடிஇ-யினால் சிமேட் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுவதால், அனைத்துக் கல்லூரிகளும் இதனை பொதுவானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் பங்குபெற மாணவர்கள் உழைப்பையும், ஏராளமான பணத்தையும் செலவிட வேண்டியுள்ளது. சிமேட் தேர்வினால் இந்த நிலை முடிவுக்கு வருகிறது.
சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர். 100 மதிப்பெண்களைக் கொண்ட இந்த தேர்வில் 4 பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 25 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக