சிங்கம்புணரி, பிப். 28-
சிங்கம்புணரி ஒன்றியத்தில் பொது வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனால் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்தனர்.
விலைவாசி உயர்வு லாபம் தரும் பொதுத்துறை நிறுவன பங்குகள் விற்பனை மற்றும் தொழிலாளர் சட்ட விதி மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடத்தப்படுகிறது.
இதில் 7 யூனியன் வங்கிகள், 11 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதனால் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாலான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருந்தே பாடங்களை படித்தனர். மேலும் சில பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக