மதுரை:பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைத்து, புவிவெப்ப மயமாதலை தடுக்க வேண்டும், என துவக்கக் கல்வித்துறை இயக்குனர் ஆ.சங்கர் பேசினார்.
மதுரையில் துவக்கக் கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. முன்னதாக உதவித் துவக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், பயிற்றுனர்கள், 17 குழுக்களாக பிரிக்கப்பட்டு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த அனுப்பப்பட்டனர். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இயக்குனர் ஆ.சங்கர் தலைமையில் ஆலோசனை நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன், கூடுதல் அலுவலர் போஸ், துவக்கக் கல்வி அலுவலர் சுபாஷினி, மெட்ரிக் ஆய்வாளர் ஞானகவுரி பங்கேற்றனர்.
கூட்டத்தில் இயக்குனர் பேசியதாவது: தேச தலைவர்களின் தியாகத்தை மாணவர் அறியும் வகையில், போட்டோக்கள் பள்ளியில் இடம்பெற வேண்டும். கிராமப்புற பெற்றோரின் கடின உழைப்பால் வழங்கும் கையெழுத்து நோட்டு போன்றவை முழுமையாக எழுதப்படுவதில்லை. அவற்றை வீணடிக்காமல் முழுமையாக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் காய்ச்சிய நீரை குடிப்பதுடன், சத்துணவை சுத்தமான இடத்தில் அமர்ந்து உண்ணச் செய்ய வேண்டும். மதுரையில் துவக்கக் கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டம் நடந்தது. முன்னதாக உதவித் துவக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், பயிற்றுனர்கள், 17 குழுக்களாக பிரிக்கப்பட்டு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த அனுப்பப்பட்டனர். அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் இயக்குனர் ஆ.சங்கர் தலைமையில் ஆலோசனை நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் நாகராஜமுருகன், கூடுதல் அலுவலர் போஸ், துவக்கக் கல்வி அலுவலர் சுபாஷினி, மெட்ரிக் ஆய்வாளர் ஞானகவுரி பங்கேற்றனர்.
கணித அறிவை மேம்படுத்த வாய்ப்பாடு படித்தலின் அவசியத்தை உணர்ந்து செயல்படுத்த வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பெற்ற ஒலி, ஒளி சாதனங்களை பயன்படுத்தி, மாணவரின் ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்க வேண்டும். பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைத்து, புவிவெப்ப மயமாதலை தடுக்க வேண்டும். ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளின் அருகில் மாணவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, இயக்குனர் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக