நரிக்குடி : மீண்டும் சென்னை சம்பவம் போல் மற்றொன்று நடக்கும் என்று ஆசிரியரை, மாணவன் ஒருவன் மிரட்டிய நிகழ்வு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தினமும் பிரார்த்தனை நடைபெறும். அதன்படி, இன்று நடந்த பிரார்த்தனைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு (விவசாய பிரிவு) படித்து வரும் மாணவன், இடையூறு செய்தான். இதனை கண்டித்த ஆசிரியர்களிடம், மீண்டும் சென்னை போன்றதொரு சம்பவம் நடைபெறும் என்று அம்மாணவன் மிரட்டினான். இதையடுத்து, பள்ளி ஆசிரியர்கள், முதல்வர் அறை முன் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பன்னிரெண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருவதால், அம்மாணவன், செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.
நன்றி: தினமலர்
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக