சென்னை :பள்ளிக் கல்வித் துறையில், 397 இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்வதற்கான கவுன்சிலிங், 29ம் தேதி சென்னையில் நடக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., தொகுப்பூதிய பணியாளர்களுக்கு என, சிறப்பு போட்டித் தேர்வை (குரூப்-4) நடத்தியது. இதன்மூலம், பள்ளிக் கல்வித் துறைக்கு, 397 இளநிலை உதவியாளர்கள் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., அளித்துள்ளது.இவர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கவுன்சிலிங், சென்னை, அசோக்நகரில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 29ம் தேதி காலை, 10 மணிக்கு நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்பவர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யிடம் இருந்து பெற்ற அறிவிப்புக் கடிதம் மற்றும் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக