தஞ்சாவூர்,மார்ச்.18-
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பதிவு மூப்பு பட்டியலை சரி பார்க்கலாம் என்று வேலை வாய்ப்புத்துறை உதவி இயக்குனர் கூறி உள்ளார்.
வேலைவாய்ப்பு அலுவலகம்
தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கும் பணி வேலை வாய்ப்பு துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது. அறிவிக்கப்பட்டு உள்ள பணி காலியிடங்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் தயாரிக்கப்பட உள்ள தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவுதாரர் பட்டியலை தஞ்சை மாவட்ட தேசிய தகவல் மைய இணையதளத்தில் åலீணீஸீழீணீஸ்éக்ஷீ.ஸீவீநீ.வீஸீ. நாளை
(திங்கட்கிழமை) முதல் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இணையதளத்தில் பார்க்கலாம்
15-3-2012 வரை பதிவு செய்துள்ள ஆங்கிலம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய 9 பாடப்பிரிவுகளில் பதிவு செய்துள்ள பட்டதாரி ஆசிரியர் பதிவுதாரர்கள் தங்களது பதிவு விவரங்களை åஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீé.ரீஷீஸ்.வீஸீ. என்ற இணையதளத்தில் (தங்களது பெயரினை ïசர் ஐ.டி. ஆகவும், பிறந்த தேதியினை பாஸ்வேர்ட் ஆகவும் உபயோகித்து) தங்களது பதிவு விவரங்கள், கல்வித்தகுதி, இனம், வகுப்பு, முன்னுரிமை, முகவரி போன்ற அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பதிவு விவரங்களில் திருத்தம் இருப்பின் வருகிற 21-ந்தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு பட்டியலில் உள்ள விடுபாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக