ஈரோடு: ஈரோடு, செங்கோடம்பள்ளத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக, ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்தை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறியதாவது: அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை, பள்ளி அலுவலகத்தில் செலுத்திவிட்டோம். ஆனால், அதிக கட்டணம் கேட்டு கட்டாயப்படுகின்றனர். இது சம்பந்தமாக ஃபிப்.,27ல் மெட்ரிக் பள்ளி ஆய்வாளரிடம் மனு கொடுத்தோம்; எவ்வித நடவடிக்கையும் இல்லை. கல்வித்துறை அதிகாரிகளை சந்திக்க சி.இ.ஓ., அலுவலகம் வந்தோம். ஆனால், அலுவலகத்தில் அவர் இல்லாததால் முற்றுகையிட்டோம். குழந்தைகளின் எதிர்கால கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மனு அளித்த பின், கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக