பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அகமது வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. அதற்கு தகுதி வாய்ந்த நபர்களின் பட்டியல், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் கீழ்கண்ட பாடப்பிரிவுகளுக்கு தயாரிக்கப்படவுள்ளது.
தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், புவியியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எட்., முடித்துள்ள, அனைத்து வகையான முன்னுரிமை பிரிவு மனுதாரர்களும், 2012 மார்ச் 15ம் தேதி வரையிலும், பொதுப்போட்டி மனுதாரர்களை பொருத்தமட்டில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு மட்டும், 2007 டிசம்பர் 31 வரை பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
மேலும் எஸ்.சி.(ஏ), எஸ்.டி., பி.சி.,(எம்), போன்ற இனத்தவர்களுக்கும், கன்னடம், மலையாளம், தெலுங்கு, உருது ஆகிய பயிற்று மொழிகளில் பி.எட்., படித்த நபர்களுக்கும், 2012 மார்ச் 15 வரை பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
எனவே மேற்கண்ட பாடங்களில் பி.எட்., படித்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மனுதாரர்கள் அனைவரும், தங்களது வேலை வாய்ப்பு அடையாள அட்டை, மற்றும் இதர ஒரிஜினல் கல்வி சான்றுகளுடன், 20ம் தேதி இன்றுக்குள், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று, தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றிட உரிய ஆவனங்களை சமர்ப்பித்து, சரிபார்த்து கொள்லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக