தேனி: பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எஸ்.எஸ்.ஏ., மூலம் தேர்வு செய்யப்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கான பணி உத்தரவு வெளியாகி உள்ளது. வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு நிராகரிக்கப்பட்டு, தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்தனர்.டி.திருப்பதி,தேவதானப்பட்டி: கட்டட கட்டுமான ஆசிரியர் பணிக்கான நேர்க்காணலில் பங்கேற்றேன்.1985ல் பதிவு செய்து சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளேன்.
ஆர்.ரமேஷ்,போடி: கட்டட கட்டுமான பணி ஆசிரியர் பணிக்கு 1987ல் பதிவு செய்துள்ளேன். தகுதி இருந்தும் பணி உத்தரவு வரவில்லை.
கன்னிகா,சின்னமனூர்: ஓவிய ஆசிரியருக்கு விண்ணப்பித்திருந்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்து ஓவியத்தில் உயர் தகுதி பெற்றுள்ளேன். 2000-ல் பதிவு செய்துள்ளேன். எனக்கு பின் பதிவு செய்தவர்களுக்கு பணி உத்தரவு கிடைத்துள்ளது.
சி.சின்னச்சாமி,கோவில்பட்டி: ஓவிய ஆசிரியர் பணிக்கு சீனியாரிட்டி இருந்தும், பணி நியமன உத்தரவு கிடைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஸ்ரீதேவி:(முதன்மை கல்வி அலுவலர்): மாவட்டத்தில் 1,700 பேரிடம் நேர்க்காணல் நடந்தது. தகுதி,திறமை அடிப்படையில் 274 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக