பொள்ளாச்சி:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் தலைவர் சிவராமன் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் தங்கபாசு முன்னிலை வகித்தார்.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம், தேர்வுநிலை, சிறப்பு நிலைக்கு பெற்றப்பட்ட விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுத்து பணப்பயன் பெற்றுக்கொடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள ஏழு சதவீத அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
பள்ளியில் பாடவேளையின் போது மொபைல்போன் பயன்படுத்த தடை விதித்து, அதை கடுமையாக அமல்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம். மேலும், கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதிய விகிதங்களை அமல்படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக