பக்கங்கள்

இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNPTFSVG அல்லது ON TNPTFMuthupandian என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

9/16/2012

பி.எல். படிப்பு: 20ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்

அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
   இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் டி.சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் மூண்றாண்டு பி.எல். படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. 

   இதில் சேருவதற்கு 6,110 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான கட் ஆப் மார்க் வெளியிடப்பட்டு இருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும், பல்கலைக்கழக தகவல் பலகையிலும் கட் ஆப் மார்க் பட்டியலை பார்க்கலாம். அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவு - 71.033
பிற்படுத்தப்பட்டோர் - 64.090
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) - 63.217
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் - 63.478
ஆதி திராவிடர் - 56.807
ஆதி திராவிடர் (அருந்ததியர்) - 62.474
பழங்குடியினர் - 56.807

   சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்வதற்கான பொது கலந்தாய்வு, சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.

  தகுதியுள்ள மாணவ-மாணவிகளுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் விரைவு தபால் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் தங்கள் கட் ஆப் மார்க்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கிற்கு நேரடியாக மாணவர்கள் வந்துவிடலாம். இணைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்கள் ரேங்க் பட்டியலை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.

  கலந்தாய்வின் போது காலி இடங்கள் ஏற்பட்டால் அவை காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களால் நிரப்பப்படும். இதற்கான கவுன்சிலிங் 22, 24, 25ம் தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக