சென்னை: தமிழகத்தில் உள்ள 53 சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கான
கல்விக் கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு கமிட்டி நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி எல்.கே.ஜிக்கு அதிகபட்சமாக ரூ31, 875ம் பிளஸ் டூ படிக்க கட்டணமாக
ரூ36 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவானது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு கல்விக்கட்டணத்தை நிர்ணயித்து நேற்று வெளியிட்டது. மாவட்ட வாரியாக ஒவ்வொரு பள்ளிக்கான கல்விக்கட்டண விவரங்களை (வகுப்பு வாரியாக) தமிழக அரசின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதி, ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரம் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி, அதிகபட்சமாக எல்.கே.ஜி.க்கு ரூ.31,875-ம், பிளஸ்-2-வுக்கு ரூ.36 ஆயிரமும் நிர்ணயித்துள்ளார்கள். அதிகபட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ள பள்ளிகள் இரண்டும் சென்னையில் உள்ளன. மிகக் குறைந்தபட்ச கட்டணமாக எல்.கே.ஜி.க்கு ரூ.6 ஆயிரமும், பிளஸ்-2-வுக்கு ரூ.7 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக