கட்டாய
கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம்
முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
கட்டாய
கல்வி உரிமை சட்டம் குறித்து, 2013 மார்ச் மாதத்திற்குள், அனைத்து
தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம்
27ம் தேதி, வட்டார வள மைய அளவில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,
28ம் தேதி தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 29ம் தேதி நடுநிலை, உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக
கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன வழிகாட்டுதல் படி,
அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள்,
ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
இப்பயிற்சியில் ஆசிரியர்கள் மாநிலத்தில் எங்குவேண்டுமானாலும் கலந்து பயிற்சி பெற அனுமதி உண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக