தமிழகத்தில்
கூட்டுறவு சங்கத்தேர்தலை, பிப்ரவரிக்குள் நடத்தி முடிக்க அரசு
உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு சங்க தலைவர், இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட
உள்ளனர். இதற்காக அனைத்து வங்கிகளிலும் மகாசபை கூட்டங்களை நடத்தி,
உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணி, புதிய உறுப்பினர்கள்
சேர்க்கும் பணிகள் நடத்தப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, புதிய
உறுப்பினர்களாக சேரவும், பழைய உறுப்பினர்களின் சந்தா தொகை ரூ.10 மட்டுமே
வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இத்தொகை ரூபாய் நூறாக
உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தலை வரும் பிப்ரவரிக்குள் அனைத்து
மாவட்டங்களிலும் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான பணிகளை
துரிதப்படுத்துமாறு, மண்டல இணைபதிவாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக