காலாண்டுத்
தேர்வு விடுமுறைக்குப் பின், அக்டோபர் 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும்
திறக்கப்படுகின்றன. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை
தெரிவித்துள்ளது.
அரசு,
அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான
வகுப்புகளுக்கு, 21ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன.
ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று முன்தினத்துடன்,தேர்வுகள்
முடிந்தன.
ஒரு வார விடுமுறைக்குப் பின், அக்டோபர் 3ம் தேதி, மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு,
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த தேதியில், டி.இ.டி., தேர்வு நடப்பதாக அறிவித்ததால், 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த தேதியில், டி.இ.டி., தேர்வு நடப்பதாக அறிவித்ததால், 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே,
அக்டோபர் 14ம் தேதிக்கு, டி.இ.டி தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், பள்ளிகள்
ஒருநாள் முன்னதாக, 3ம் தேதியே துவக்கப்படுமா என தெரியாமல், பள்ளி
நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தவித்து வந்தனர்.
இதுகுறித்து,
பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது, "ஏற்கனவே அறிவித்த
தேதியில், எவ்வித மாற்றமும் கிடையாது. திட்டமிட்டபடி, அக்டோபர் 4ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தனர். தொடக்க கல்வித் துறையின் கீழ்
இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளும், இதே தேதியில் துவங்குகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக